• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Friday, 6 January 2017

    Kamali Panneerselvam - ஆண்களுக்கு கற்று கொடுங்கள்

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்தது கேவலமானது. ஆனால் அதை விட பயங்கரமானது ஒரு பெண் புத்தாண்டு அன்று ஆட்டோவில் இறங்கி அவளது வீட்டுக்கு செல்கிறாள். அந்த தெருவில் இரு ஆண்கள் போதையில் அத்து மீறுகின்றனர். இதற்கு உடை காரணம் என்று கூசாமல் சொல்வார்கள். ஆனால் அந்த இளைஞர்களின் வெறியில் பெண் என்பது ஒன்றே போதும் அவள் உடையோ, வயதோ, எதுவும் அவர்களை தடுத்திருக்காது.
    இங்கு அவள் புத்தாண்டுக்கு சென்றாள், குடித்திருப்பாள், ஏன் இரவில் தனியாக சென்றால் என்று பிரச்சனையை பலரும் மடைமாற்றி தான் பேசுவார்கள். .. நான் கேட்பது தனியாக செல்லும் ஒரு பெண்ணின் மீது வெறி நாய் போல பாயும் உரிமையை யார் கொடுத்தது??? அவள் உடலை அவள் அனுமதியின்றி தீண்டும் புத்தியை கொடுப்பது எது?? இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமானதா??? பெண்கள் தனியாக எங்கும் செல்லக்கூடாதா?




    இரவானால் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் பயணிக்க கூடாது, பயணித்தால் நீ யாராக இருந்தாலும் பெண் என்பதே போதும் அத்துமீறுவோம் என்ற தைரியம் எங்கிருந்து வருகிறது.. ஆணுக்கு இத்தகைய தைரியத்தை கொடுப்பது எது?
    பெண்ணுக்கு ஒழுக்க க்ளாஸ் எடுப்பவர்களுக்கு, எங்கள் ஒழுக்கத்தை பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொள்கிறோம். அதனால் எங்களுக்கு ஒழுங்காக உடுத்து, பாதுகாப்பாக இரு என்பது போன்ற அறிவுரைகளை அள்ளி தெளிக்கும் ஆண்கள் அப்படியே அவர்கள் சிந்தனையை ஒத்த சக ஆண்களுக்கு கண்ணியத்தை, ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். அவள் என்ன உடுத்தினாலும் கண்ணியமாக பார்க்க , பெண் அனுமதியின்றி அவளை தொடுவது ஆண்மையற்ற செயல் என்று ஆண்களுக்கு கற்று கொடுங்கள்.

    No comments:

    Post a Comment