ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் வரை அது இவ்வளவு பெரிய தமிழின பண்பாட்டு கலாசாரத்தை தாங்கிய விளையாட்டாக வெல்லாம் பார்க்கப்படவில்லை, ஜல்லிக்கட்டு விமிரசையாக நடக்கும் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அது ஐந்து நிமிட செய்தியாகவே இருந்தது, கும்பல் கும்பலாக மாட்டை துரத்தியபடி ஓடுவார்கள், கொஞ்ச நேரத்தில் பத்து பேர் ஒருவரை தூக்கி கொண்டு ஆம்புலன்ஸ் நோக்கி ஓடுவார்கள், அத்தோடு அந்த செய்தி முடியும்!
ஆனால் இன்று ஒட்டு மொத்த மானமும் ஜல்லிக்கட்டின் மீது வைத்து அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையென்றால் பண்பாட்டு எதிரி என்று சொல்லி விடுவார்களோ என்கிற அளவுக்கு முக்கி முனகி பேசி கொண்டு இருக்கிறார்கள்!
விளையாடுறவன் கேக்குறான், தடை கொண்டு வர இவனுங்க யாரு என PETA அமைப்பின் மீது கடுப்பாகும் சரா சரி மனோபாவம் கொண்டவன் நான். ஆனால், தமிழ்நாட்டு அடையாளத்தை சாம்பலாக்குகிறார்கள் என இவர்கள் வைக்கும் பொங்கல் எல்லா விவகாரத்திலும் இதே விவேகத்தோடு இருக்கிறதா என்றால் இல்லை! தமிழ் தேசியம் என்றாலே செலக்டிவ் பொங்கல் தானே!
அந்த வகையில் சித்திரை மாதம், சம்ஸ்கிருத ஜாதகம் பார்த்து சமஸ்கிருத பெயர் வைத்து, தமிழ் வருட பிறப்பை ஏப்ரல் பதினான்கு தான் என சாஸ்திரிய இந்துக்கள் தமிழ் வருடப்பிறப்பை முடிவு செய்வார்கள், இந்த ஜல்லிக்கட்டுக்கு பண்பாட்டு கூச்சல் போடும் முக்கால் வாசி பேருக்கும் மேல் அதற்கு மௌனம் காப்பார்கள், சம்ஸ்கிருத வருட, மாத பெயர் வைத்து ஒருத்தன் தமிழ் வருட பிறப்பு குறித்து கொடுத்தால் அதற்கும் முட்டு கொடுப்பது என்ன மாதிரியான பண்பாட்டு மீட்டல் என்பது விளங்கவில்லை!
அதே போல விவசாயத்தை பொறுத்த மட்டும், நீரில்லாமல் விவசாயத்தை விட்டவனை விட, லாபமில்லை என விவசாயத்தை விட்டவனை, கருமம் இதை விட்டுட்டு வேற வேலை செஞ்சா கௌரவமா வாழலாம் என விவசாயத்தை விட்டு ஓடிய விவசாய கூலிகள் குறித்த சமூக பின்னணியோ, அந்த ஆதிக்கத்தை குறித்தோ தமிழ் தேசிய வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள்!
பாசன நீரில்லாமல் வெறும் நிலத்தை வைத்து அதை ரியல் எஸ்டேட் காரன் கிட்ட விற்று வேறு பொழைப்பை தேடிகிட்டவனும் விவசாயி தான், கடைசி வரை கூலியாவே இருந்து கால் காணி நிலமில்லாமல், மரியாதை இல்லமல் ஓடியவனும் விவசாயி தான்!
இதுல எந்த விவசாயிக்கு நாம் குரல் கொடுக்கிறோம் என்பதும் விளங்காது!
ஏன்னா, பழங்காலம் தொட்டு சுய விமர்சனம் தமிழனுக்கு அலர்ஜி, PETA , பன்னாட்டு நிறுவனம், பிரிட்டிஷ், அமெரிக்கா, மீத்தேன், ப்ரொபேன் ன்னு பொங்கல் வைக்க பொது எதிரி வேண்டும், அதுக்கு முன்னாடி பூரா பயலும் கட்டி பிடிச்சிக்கிட்டு "முஸ்தபா முஸ்தபா" பாடி ஒரே பீடியை மாறி மாறி பிடிச்ச மாதிரி தான்!
நீங்களும் உங்க வரலாறும்!

No comments:
Post a Comment