வீட்டருகில் பொருட்காட்சி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். முகப்பில் ‘முதல் மரியாதை’ பாட்டு ஒலிக்கிறது. ‘அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக...!” அப்படம் வெளியாகி ஒன்றிரண்டல்ல, முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இடையில் நூறு போக்குகள் தோன்றி மறைந்துவிட்டன. ஆனால், புது வணிகத் தொடக்கத்தின் மகிழ்ச்சி அறிவிப்பாக முதல் மரியாதை ஒலிக்கிறது. அப்படம் வெளியானபோது பிறந்திராத இளையவர்கள் இன்று கேட்டுத் திளைக்கின்றனர். அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்வதுதான் காலத்தை வென்று நிற்பதன் முதல்படி.
Friday, 6 January 2017
கவிஞர் மகுடேசுவரன்

No comments:
Post a Comment