• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Friday, 6 January 2017

    வாசுகி பாஸ்கர் - சமூகம் அமையாது, உருவாக்குவோம்

    புது வருட கொண்டாட்டமாய் நல்ல குத்து பாட்டாய் போட்டுட்டு இருக்காங்க எங்க மாமியார் வீட்டு தெருவுல! இறங்கி ஒரு குத்து குத்தணும் போல இருக்கு, பொதுவாகவே திருவிழாவிலோ, வேறு எங்கெல்லாம் தாரை தப்பு வாசிக்கிறாங்களோ அங்கையும் இறங்கி ஒரு குத்து குத்தணும்னு சர்வ நிச்சயமா ஒரு 80 % சதவிகித மக்களுக்கு ஆசை உள்ளுக்குள் கிடந்து ஏங்கும், பல காரணங்களுக்கு அவை நிறைவேறாத ஆசையாகவே இருக்கு, எல்லோரும் துணிந்து இறங்கி குத்துவதில்லை, அதற்கான காரணங்களை எல்லாம் நாம் யோசித்து இருக்க மாட்டோம், கூச்சம் சில சதவிகிதம் தான். கெளரவம், லோக்கல், பறை, ரோடு, கலந்து ஆடுகிற மக்கள்ன்னு நம்மை பல விஷியங்கள் மறைமுகமாக கட்டுப்படுத்துது, அந்த கட்டுப்படுத்தும் சக்தி எதுவென்றால் உள்ளுக்குள் ஆசை இருந்து கடந்து விடுகிற நம்மை போன்றவரில்லை, சமூகத்தில் மிச்ச சதவிகித மக்களாக இருக்கிற opinion makers , இந்த சமூகத்தை கட்டுப்படுத்தும் கருவி அவர்களிடத்தில் இருக்கு, அதன் நீட்சியாக தான் கேரளாவின் செண்டை மேளம் திருமண விழாவின் அங்கமாகவும், இந்த மண்ணின் பறையிசை அந்நியமாகவும் நமக்கு உருவகப்படுத்த பட்டு இருக்கிறது!
    இசையின் இலக்கணத்தில் எல்லாமே ஒண்ணு தான், அது சாஸ்திரிய சங்கீதமாய் இருந்தாலும், ஒழுங்கப்படுத்த படாத இசையானாலும், செண்டையிலும் 6 / 8 தாள நடை தான் நம்மை ஆட்டுவிக்குது, அந்த தாள நடையின் ஆதார கருவி பறையிலும் அதே தான் நம்மை மயிர்கூச ஆட தயார் செய்கிறது, ஆனாலும் ஏன் இந்த பாகுபாடு?

    காரணம் புதுசா ஒன்றை அறிமுக படுத்த வேண்டுமானால், அங்கே ஏற்கனவே இருக்கிற பெருபான்மை அங்கீகாரம் பெற்றவையை இழிவுபடுத்தி அழித்து விடவேண்டும், இது தான் காலம் காலமாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது, இவையெல்லாம் புரிய வேண்டுமானால் சமூக அரசியலையும், கேள்விக்கு உட்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்க வேண்டும்,
    அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துங்கள், சமூகத்து ஏற்ற தாழ்வு என்பது வெறும் மூளையில் படிந்து கிடக்கும் ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் போல, தப்பான சிந்தனைகளை ஆதாரமாக வைத்து தப்பான சிந்தனைகளை பெருக்க கூடியவை, அதன் இருப்பு இருப்பதை நாசமாகவும், நாசமானதை அஸ்திவாரமாக வைத்து இன்னொரு நாசத்தையும் உருவாக்கும், இவையெல்லாம் டெக்னீக்களாக கலைய படாமல், பெருந்தன்மையாக 'எனக்கெல்லாம் பாகுபாடு கிடையாது' என்கிற ஸ்டேட்மென்ட் சமூகத்தை மாற்றாது!
    தொடர்ந்து செய்வோம், சமூகம் பேசுவோம், உறவுகளை கொண்டாடுவோம், மனிதம் போற்றுவோம்,
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், சமூகம் அமையாது, உருவாக்குவோம்

    No comments:

    Post a Comment