• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Sunday, 8 January 2017

    வாசுகி பாஸ்கர் - எது கலாச்சாரம்

    வரலாற்றில் கடந்த காலத்தை குறித்து எந்த வித தரவுகளின் அடிப்படையிலும் இல்லாமல் கலாசாரத்தை குறித்து ஒரு பெரும் வியப்பு நமக்கு உண்டு, ஆதாரமில்லாத அந்த ஆதாரத்தை வைத்து தான் கடந்த காலத்தை ஒப்பிட்டு கள்ளக்காதல், விவாகரத்து போன்ற விகிதாச்சாரங்களை வைத்து கலாசாரம் சீரழிந்து போய் கொண்டு இருக்கிறது என ஒப்பாரி வைக்கிறோம்!
    கடந்த காலத்தை சிலாகிக்கும் இந்த போக்கு எங்கே கொண்டு போய் முடியுமென்றால், அல்லது எதில் முடிப்பார்கள் என்றால், அக்காலத்து ஆண்கள் பெண்களை மட்டுப்படுத்தி வைத்து இருந்ததில் காரணம் இருக்க தான் செய்கிறது, பெண்ணை அப்படி வைத்திருப்பது தான் உத்தமம் போல என போய் முடிப்பதற்கு இந்த போலி வரலாற்று உதாரணங்கள் உதவ கூடும்!
    Western கலாசார பாதிப்பு சீரழிவு என சொல்லும் அதே வேளையில், இந்திய கோவில் சிற்பங்களும் கஜீராஹோ சிலைகளும், ஓவியங்களும் இன்றைய இந்திய செக்ஸ் புரிதலில் இருந்து வேறுபட்டு நிற்கிறது, Group sex , Animal sex , ஹோமோ, லெஸ்பியன் என்று நீங்கள் எதை சீரழிவாக சொன்னாலும், அவை நம்மிடையே வரலாற்று சின்னங்களாக இருந்திருக்கிறது, மனித மனம் தன்னோட creativity யை கட்டுக்கடங்காமல் விஸ்தரிக்க கூடியது, அதற்கு எல்லையே இல்லை, கேளிக்கையின் உச்சமாக எதுவெல்லாம் அவனுக்கு புது உணர்வை தருகிறதோ அதையெல்லாம் முயற்சித்து பார்க்கும் மனோபாவம் கொண்டவன், அத்தகைய மனிதன் இந்தியாவில் வாழ்ந்ததில்லை என சுலபமாக தப்பி விடுவது சுத்த அயோக்கியத்தனம். கால மாற்றம், சமூக மாற்றம், கேளிக்கையின் சாராம்சம் மாறியதால், காலத்தால் பல மாற்றங்களை சந்தித்தோம்!


    இந்திய குடும்ப அமைப்பில் குறைந்தது கடந்த இருநூறு வருட வாழ்வியல் வரலாற்றை ஒப்பிட்டால் கூட இன்றைய வாழ்வியல் முறை அதை விட சிறந்தது என்று ஆணித்தரமாக நீங்கள் நம்பலாம், அது ஆண் கட்டமைத்த சமூகம், கட்டி கொண்டது கட்டாதது என தாரங்கள் கணக்கில்லை, ஒழுங்குபடுத்தப்படாத ஒரு குடும்ப அமைப்பாக தான் இருந்திருக்கிறது, அது பரிணமித்து இன்றைய தேதியில் நாம் அனைவருமே ஒரு நல்ல குடும்ப அமைப்பை அடைந்து இருக்கிறோம், அது இன்னும் மேம்படும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை!
    காரணம், கணவன் மனைவி வாழ்க்கை கசப்பானதாக இருந்தால், கடமையே என வாழ்ந்து தொலைக்க வேண்டிய அவசியம் இன்றில்லை, பெண்ணின் சம்மதத்தை கேட்டு திருமணம் செய்வது என்பது சமீபத்திய வளர்ச்சியில் பெருகி வருகிற சதவிகிதம், காலம் பின்னோக்கி செல்ல செல்ல பெண்ணின் சம்மதம் என்பது தலையை ஆட்டி தான் ஆக வேண்டும் என முடிவு செய்து "பிடித்து இருக்கிறதா" என சம்பிரதாயமாக கேட்கப்படும் கேள்வி மட்டுமே, பிடிக்க வில்லை என்று சொன்னால் அதை விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அந்த பெண் அறிவாள், பெரும்பாலும் "உங்களுக்கு சரின்னா, எனக்கும் சரி தான்" பதில் ரகங்கள் தான்!
    விவாகரத்து வழக்குகள் அதிகமான அதே வேளையில் stove வெடித்து மரணிக்கும் மருமகள்கள் குறைந்து இருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும், பெண்ணை அடித்து துன்புறுத்தி காலத்துக்கும் அடிமையாக வைத்து குடும்பம் நடந்தும் சூழலும் இனி போக போக சுத்தமாய் இருக்காது, வாழ்க்கை தேர்வின் அடிப்படையில் பயணித்து கொண்டு இருக்கிறது, இந்த நிலையை எட்டி விட்ட நாம், இன்னொரு காதலனுக்காக ஒரு பெண் தன் கணவனையே கொலை செய்கிறாள் என்றால் சமூகத்தை சீராக பார்க்கும் மனோபாவம் நமக்கும், திருமணம், காதல் என்னவென்பதை யும் குறித்து சில அடிப்படை புரிதல்கள் வேண்டும், அதில் இரண்டு விவகாரங்கள் முக்கியமானதாக தான் கருதுகிறேன்,
    1. ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ திருமண வாழ்க்கை பிடிபடவில்லையென்றால், அவர்கள் பிரிந்து மாற்று வாழ்க்கையை ஏற்படுத்தி கொள்ள முனையும் போது, குடும்ப அமைப்பும், சமூக அமைப்பும் அதை ஏலியன் விவகாரமாக பார்க்க கூடாது, பிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் சேர்ந்து வாழ்வதை விட பிடித்த ஒருவரோடு வாழ்வது நல்லது. குடும்ப நிர்பந்தத்தாலோ, சூழலாலோ ஒரு மணமுறிவு ஏற்படும் போது சுற்றத்தின் Reaction கணிசமான அளவு தனி மனிதரை பாதிக்கிறது, தன் மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க தயாராகும் ஒரு அப்பாவுக்கு மனப்பூர்வமான சம்மதம் இருந்தும் அவர் அதிகம் அஞ்சுவது இந்த சமூகத்துக்கு தான், அதே போல தனி நபருக்கும் அத்தகைய எதிர்வினைகள் வறுத்து எடுக்கும். யார் என்ன நினைத்தால் எனக்கென்ன என இந்த சமூகம் இன்னமும் முழுமையாக இயங்கவில்லை, இந்திய சமூகம் அனைத்தயும் பின்னி பிணைந்த படி இருக்கிறது, விவாகரத்து வழக்குகள், உவப்பில்லாத வாழ்க்கையை உதறுவது ஒரு பெரிய விடயமாக பார்க்கப்படாமல், சந்தோஷமாக பிரிந்து வாழ்க்கையை தேர்ந்து எடுக்கும் சூழல் இன்னும் ஆரோக்கியமாக வேண்டும்.
    2. நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ, ஒரு துணையை கை பிடிக்க இருக்கும் காரணங்களில் ஒரே ஒரு காரணம் மிக வலுவான காரணமாக இருக்க வேண்டும், குடும்ப நிர்பந்தமோ, பொருளாதார வாழ்வுக்கு ஆசை கொண்டோ, இளம் வயது திருமணமோ கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும். சமரசம் இல்லாத ஒரு காரணம் உங்கள் மனதில் ஆழமாக படிந்து இருக்க வேண்டும், அந்த காரணம் தான் கணவன் மனைவிக்குள் எவ்வளவு சண்டைகள் குழப்பங்கள் வந்தாலும், குறிப்பிட்ட இடைவெளி முடிந்து ஓடி போய் கட்டி பிடிக்க வைக்கும், அந்த ஒரு காரணத்திற்கு நீங்கள் உங்கள் துணையை விட்டு கொடுக்கவே கொடுக்காத காரணமாக இருக்க வேண்டும். அன்பு, காதல், சமூக அக்கறை, உதவும் எண்ணம், ஒருமித்த சிந்தனை, என்று ஏதோ ஒன்று உங்களை இணைக்கணும், அது உங்கள் பர்சனல் justification point ஆக இருக்க வேண்டும். அது என்னவென்று நீங்கள் யாருக்கேனும் சொன்னால், கேட்பவர், "இது ஒரு காரணமா" என்று கேட்டாலும் பரவாயில்லை, உங்களை உள்ளுக்குள் ஆழ படிய வைக்கும் காரணமாக இருத்தல் வேண்டும்.
    அத்தோடு, திருமணத்துக்கு பின் ஆணும் பெண்ணும் தங்களின் தேவைகளை கேட்டு பெற்று கொள்ளும், எதுவாக இருந்தாலும் அதை குறித்து பேச தயக்கமே இல்லாத சூழல் காலத்தால் உறவில் வர வேண்டும். ஆயிரம் பெண்ணியம் பேசினாலும், இன்னமும் நம்மூர் பெண்களுக்கு சில விஷயங்களை கேட்டு பெறுவதில் தயக்கம் இருக்க தான் செய்கிறது, ஒரு ஆண் எப்படி அதையெல்லாம் பேச தயாராகிறான், அவன் எவ்வளவு இடம் கொடுக்கிறான், அவன் எப்படி எடுத்து கொள்வான் என்பதை எல்லாம் வைத்து தான் பெண் இசைகிறாள், Relationship ல் சீரியஸ்னஸ் கூடவே கூடாது, மிக வெளிப்படை தேவை. இந்த காலத்திலும் இது எங்கெல்லாம் நவீனமாய் பிரச்சனையாக இருக்கிறது என சொல்கிறேன்,
    இவ்வளவு பெண் சுதந்திரம் பேசும் காலத்திலும், திருமணத்துக்கு பிறகு குழந்தை கை கூட வில்லையென்றால், முதலில் செக் அப் Treatment க்கு ஒரு குடும்பம் பரிந்துரைப்பது பெண்ணை தான், கரு முட்டை தாங்குகிற நிலையில் இருக்கிறாளா இல்லையா என பரிசோதனை செய்து, குறைத்த காலம் சிகிச்சை எடுக்கிறாள், பலன் எதுவும் தராத கடைசி கட்டத்தில் தான் ஆண் பரிசோதனைக்கு தயாராகிறான், அல்லது பரிசோதனையை செய்து கொள்ளாமல் இருக்கிற நிலையும் இன்று அளவும் இருக்கு! இதில் என்ன கெளரவம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், மருத்துவ ரீதியாக இதை அணுக வேண்டும், ஆண்மை என்பதை உன்னத நிலையாக ஆண்களும், பெண்களுமே நினைப்பதை தவிர்க்க வேண்டும், தலை வலி காய்ச்சலுக்கு மருந்து எடுத்து கொள்ள போவதை போல, மனைவி சர்வ சாதாரணமாக "வாங்க, வைத்தியம் எடுத்துக்கலாம்" என்றால் மன திடத்தோடு போக வேண்டியது தான், "ஒரு வேலை பிரச்சனை உங்களுக்கு தான் இருக்குதோ" என ஒரு பெண் ஆணை கேட்க தயங்குகிற சூழல் இருந்து கொண்டு தானே இருக்கிறது, ஆண் அதை ஏன் கௌரவ குறைவாக நினைக்க வேண்டும் என தெரியவில்லை. ஆக, ஆணும் பெண்ணும் அன்னோன்னியமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இம்மாதிரி விவகாரங்கள் தான் சாட்சியே அன்றி, ஒருவருக்கு ஒருவர் தயங்கி கொள்வதில் இல்லை, உறவுகளுக்குள் கெளரவம் பார்ப்பதில் இல்லை!
    இந்த சினிமாவும், பத்திரிகையும், காதல், காம சொட்ட சொட்ட நாம் ரசித்த கதைகளும், கற்பனைகளும் என ஒட்டு மொத்தமாய் ஆண்கள் மனதில் பெண்ணின் மார்பகம் குறித்து பதித்துள்ள Fantasy உணர்வுகளை எல்லாம் தாண்டி, வாழ்வின் ஒரு கட்டத்தில் ஒரு பக்க மார்பகத்தை இழந்து நிற்கும் துணையை, முன்பை விட கூடுதலாய் காதலிக்கும், அக்கறை எடுத்து கொள்ளும் அளவு பக்குவ பட கூடியது இந்த மனம், காதல், காமம்!
    இப்படி பட்ட இந்த உன்னத மனிதனை, எதை எதையோ சொல்லி, என்னவெல்லாமோ உதாரணம் காட்டி, புரிதலில்லாமல் எங்கெங்கோ இட்டு செல்வதில் இந்த சமூகத்துக்கும் ஒரு பங்குண்டு! நல்லவை வரலாற்றில் மட்டும்மல்ல, கண் எதிரிலும் இருக்கு, அதை அதன் யதார்த்த பிடியில் இருந்து வசப்படுத்தி கொள்ள வேண்டியது, வழி காட்ட வேண்டியது நம் கடமை!

    No comments:

    Post a Comment