• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Monday, 9 January 2017

    கவிஞர் மகுடேசுவரன் - சல்லிக்கட்டுக் காளை

    சல் என்பது ஒலிக்குறிப்பு. அதிலிருந்து தோன்றியதே சல்லம். இடைமெய்க்குறையுற்றது சலம். நீர் நகர்வின் சிற்றொலிக் குறிப்பால் தோன்றிய சொல். சலசல என்று நீரோடியது என்பதில் உள்ள சல’வும் இஃதே. ஒன்றின் சிற்றுருக்களைப் பிரிப்பதே சலித்தல். அதற்கு உதவும் கருவி சல்லடை. நல்ல ஓட்டையுள்ள கரண்டி சல்லிக்கரண்டி.


    சல்லிக்காசு என்பது காசு வகையின் சிற்றலகு. பொங்கல் நாளில் மாட்டுக்கொம்பில் கட்டும் பணமுடிப்புக்குச் சல்லிமாலை என்று பெயர். அன்று எல்லா மாட்டுக் கொம்புகளிலும் சல்லிமாலை கட்டி அவிழ்த்துவிட்டுவிடுவார்கள் அதை யார் வேண்டுமானாலும் கட்டித் தழுவி, கொம்பில் கட்டப்பட்டுள்ள மாலையை அவிழ்த்து சல்லிக்காசுகளை எடுத்துக்கொள்ளலாம். சல்லிமாலை கட்டப்பட்ட காளை சல்லிக்கட்டுக் காளை.

    No comments:

    Post a Comment